மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
15 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
16 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
இன்று இனிதாக திருவள்ளூர்
29-Dec-2025
குன்றத்துார், சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் வித்யாசங்கர், 60. இவருக்கு தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பில், 7.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து பராமரிக்க, அதே பகுதியில் வசிக்கும் காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., மாவட்ட செயலாளர் ஒம்சக்தி செல்வமணி என்பவரிடம் கொடுத்துள்ளார். அந்த இடத்தை நான்கு ஆண்டுகளாக ஒம்சக்தி செல்வமணிபராமரித்த நிலையில், வித்யாசகர் தன் நிலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். ஒம்சக்திசெல்வமணி நிலத்தை தரமறுத்துடன், தன்னிடம் நிலத்திற்கான பத்திரம் இருப்பதாக கூறி தகராறில் ஈடுப்பட்டதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் வித்யாசாகர் புகார் அளித்தார். போலீசார் செல்வமணியிடம் விசாரித்தபோது, அவர் வைத்திருந்தது போலி பத்திரம் என்பது தெரிய வந்தது. நிலத்தை திருப்பி தருவதாக செல்வமணி கூறியதையடுத்து, புகாரை வித்யாசங்கர் வாபஸ் பெற்றார். ஒம்சக்தி செல்வமணி மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிறக்கு சொந்த ஜாமீனில் செல்வமணி விடுக்கப்பட்டார்.
15 hour(s) ago
16 hour(s) ago
29-Dec-2025
29-Dec-2025