உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலை மறியலில் ஈடுபட்ட நா.த.க.,வினர் மீது வழக்கு

 சாலை மறியலில் ஈடுபட்ட நா.த.க.,வினர் மீது வழக்கு

திருவாலங்காடு: திருவாலங்காடில் ரத்த தானம் முகாமுக்கு அனுமதி மறுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று முன்தினம் காலை நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் நடந்தது. 'முகாம் நடத்த அனுமதியில்லை' என, போலீசார் கூறியதால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, முகாம் நடத்த அனுமதி வேண்டி, திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், அக்கட்சியின் தலைமை நிலைய செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட, எட்டு பேர் மீது திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை