உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருத்தணியில் தொடர் மழை விவசாய பணிகள் பாதிப்பு

 திருத்தணியில் தொடர் மழை விவசாய பணிகள் பாதிப்பு

திருத்தணி: திருத்தணியில் நேற்று பெய்த மழையால் விவசாய பணி பாதிக்கப்பட்டது. திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நேற்று காலை - மாலை வரை அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. அதேபோல், விவசாய பணிகளும் பாதிக்கப் பட்டன. குறிப்பாக, நெல்பயிர் நாற்று நடவு, கரும்பு அறுவடை மற்றும் பூக்கள் பறிப்பு போன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 - 30 நிமிடங்கள் வரை பலத்த மழை பெய்தது. மழையால் பூ பயிரிட்ட விவசாயிகள், பூக்களை பறிக்க முடியாததால், சில பூக்கள் செடியிலேயே அழுகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ