திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர், அலுமேலுமங்காபுரம், கிருஷ்ணசமுத்திரம் ஆகிய மூன்று ஏரிகளில், மீன்கள் ஏலம் விடுவதற்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறையினர் தீர்மானித்தனர். நீர்வளத்துறை
அதன்படி நேற்று முன்தினம் அலுமேலுமங்காபுரம் ஏரியில் மீன் ஏலம், திருத்தணி நீர்வளத்துறை உதவி பொறியாளர் காளம்பரி, ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் 90,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இதையடுத்து அகூர் ஏரி மீன் ஏலம், நீர்வளத்துறை உதவி பொறியாளர் காளம்பரி, ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, நீர்பாசன விவசாயிகள் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஏலம் துவங்கியது.அப்போது விவசாயிகள், அகூர் ஏரியில் உள்ள தண்ணீரை நம்பி, பல ஏக்கர் பரப்பில், நெல், வேர்க்கடலை மற்றும் கரும்பு போன்ற பயிர்கள் செய்து உள்ளோம். தள்ளி வைப்பு
மீன்கள் ஏலம் விட்டால் ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால், பயிர்கள் கருகும் நிலைக்கு போகும் என்பதால் இரண்டு மாதத்திற்கு பின் மீன்கள் ஏலம் விடவேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் நீர்வளத் துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் தற்காலிகமாக மீன் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மற்றொரு தேதி முறையாக அறிவித்து மீன் ஏலம் விடப்படும்.கிருஷ்ணசமுத்திரம் ஏரியில் மீன் ஏலம் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என, உதவி பொறியாளர் காளம்பரி தெரிவித்தார்.