உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  உலக மீனவர் தினம் முன்னிட்டு மீனவருக்கு மீன் வளர்ப்பு காப்பீடு

 உலக மீனவர் தினம் முன்னிட்டு மீனவருக்கு மீன் வளர்ப்பு காப்பீடு

திருவள்ளூர்: உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, மீனவர்களுக்கான மீன் வளர்ப்பு காப்பீட்டை திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வழங்கினார். மீன்வளத் துறை சார்பில், உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, மீன் வளர்ப்பு காப்பீட்டு கொள்கை வினியோக விழா நேற்று நடந்தது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, மீன் வளர்ப்பு காப்பீட்டு கொள்கை வினியோகம் செய்தார். மீன் வளர்ப்பு காப்பீட்டின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு முதல் காப்பீட்டு அட் டையை ைவழங்கினார். பின் கலெக்டர் பிரதாப் கூறியதாவது: ஏ.ஐ.சி.ஐ.எல்., நிறு வனம் சார்பில், கடந்த ஜூன் மாதம் மீன் வளர்ப்பு காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த காப்பீட்டில், குளத்தில் மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு மீன் வளர்ப்பு முறைகள் அடங்கும். இந்த காப்பீடு, பல்வேறு மீன் இனங்களுக்கு, நிதி இழப்புகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு வலையையும், உட்கட்டமைப்பையும் வழங்குகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், மீன்வளத் துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - வேளாண்மை வேதவல்லி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்