உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பறக்கும் படை சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்

திருவள்ளூர் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் சோதனையில், மதுபானம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.திருவள்ளூர் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாவட்டம் முழுதும் 90 பறக்கும் படை, 90 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர், கடந்த மூன்று நாட்களாக, தொகுதிகளில் வரும் கார்களில் சோதனையிட்டு வருகின்றனர். திருத்தணி பொன்பாடி சோதனை சாவடியில் பறக்கும் படையினரின் பணியை, கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மாவட்டம் முழுதும் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ள நிலையில், வாகன சோதனை, மதுக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில், பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர்.சோதனையில் இதுவரை, ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியில் இயங்கி வரும் மதுபான கூடங்களில், கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட, 1,063 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 1.64 லட்சம் ரூபாய். இது தொடர்பாக, பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நெமிலிச்சேரி வெளிவட்டச் சாலையில், உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட, 2.46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, ஆவடி கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கும்மிடிப்பூண்டி

துணை பி.டி.ஓ., ஹேமலதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், கவரைப்பேட்டையில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்தை நிறுத்தி பயணியரின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் பயணித்த, சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த துர்கா, 28, என்ற பெண்ணிடம், 15 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 36,000 ரூபாய் பறிமுதல் செய்தனர். பின், கவரைப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், குட்கா கடத்திய பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்