உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரண்டு மண்டபங்கள் அமைக்க அடிக்கல்

இரண்டு மண்டபங்கள் அமைக்க அடிக்கல்

நகரி:ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் நகரி அடுத்த டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதில், 41 லட்சம் ரூபாயில், புதிதாக பக்தர்கள் தங்குவதற்கு மண்டபம், கோவிலின் அடிவாரத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு தீர்மானித்து, அதற்கான அடிக்கல் நடவு நேற்று நடந்தது.இந்த இரு மண்டபங்களுக்கு, ஆந்திர மாநில சுற்றுலா துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார். இதற்கு முன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நிதியில் இருந்து, 7.25 லட்சம் ரூபாயில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை