உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேருந்து மோதி காவலாளி பலி

பேருந்து மோதி காவலாளி பலி

திருத்தணி திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி மகன் சீனிவாசன், 59. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு தன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, திருத்தணி - நாகலாபுரம் நெடுஞ்சாலையில் சந்தான கோபாலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, திருத்தணியில் இருந்து நாகலாபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். கனகம்மாசத்திரம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ