உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தளபதி கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தளபதி கல்லுாரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருத்தணி: சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தளபதி கே.விநாயகம் மகளிர் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில் மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி தாளாளர் பாலாஜி தலைமை வகித்தார். முதல்வர் வேதநாயகி வரவேற்றார். இதில், அமெரிக்க நாட்டில் இருந்து, கிளே ஜான்சன், ஜெர்மிடேவிஸ் மற்றும் ராய்நைட் ஆகியோர் பங்கேற்று, மாணவியருக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து, இக்யூனிக் குளோபல் மிஷன் குழுவின் இசை நிகழ்ச்சி மற்றும் மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் பொற்செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ