மேலும் செய்திகள்
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
8 hour(s) ago
திருவள்ளூரில் மகளிர் தின விழா நிறுத்தம்திருவள்ளூர்: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக, கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் திருவள்ளூர் ஆயில் மில் அருகே உள்ள ஐ.ஆர்.என்., தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் மகளிர் தின விழா நேற்று நடந்தது.விழாவில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, திருவள்ளூர், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வி.ஜி.இராஜேந்திரன், எஸ்.சந்திரன், தி.மு.க., நிர்வாகிகள் உள்பட 500க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள், பெண்கள் பங்கேற்றனர்.தேர்தல் நடத்தை விதிகளை மீறி 20க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி துவங்கியதும், தகவல் அறிந்த திருவள்ளூர் வட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான வாசுதேவன், திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வந்து தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது, இது போன்ற விழா நடத்த அனுமதியில்லை என்றனர்.இதையடுத்து அமைச்சரும், திருத்தணி எம்.எல்.ஏ., மற்றும் கட்சியினர் வெளியே சென்றனர். அப்போது எதிரே வந்த திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் அமைச்சரிடம் நிகழ்ச்சி முடிந்து விட்டதா என கேட்டபோது, உடன் வந்த கட்சியினர் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது என கூறியதும் அவரும் வெளியேறினார். பின் அங்கு சேர்களில் அமர்ந்திருந்த பெண்களிடம் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், 'இந்தாம்மா எழுந்து போங்க' என கறாராக கூறினர். இதையடுத்து பெண்களும் கலைந்து சென்றனர்.தேர்தல் விதிமுறை அமலில் உள்ளபோது நடந்த மகளிர் தின விழா நிகழ்ச்சியில் அமைச்சரும், எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பையடுத்து, தேர்தல் விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தது.இந்நிலையில், திருத்தணி ஒன்றியம் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று காலை வேலஞ்சேரி காலனியில் வசிக்கும் ஏழைகளுக்கு, தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, சமையல் எண்ணெய், கடலை மற்றும் ஒரு கொசுவலை என, 1,000 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, உத்தரவுபடி திருத்தணி தாசில்தார் மதியழகன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நிவாரண பொருட்களை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
8 hour(s) ago