உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மெதுார் கூட்டுறவு வங்கிக்கு விருது

 மெதுார் கூட்டுறவு வங்கிக்கு விருது

பொன்னேரி: மெதுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, நபார்டு வங்கி சார்பில் மாநில அளவில் விருது வழங்கப்பட்டுள்ளது. பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 5,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கடனுதவி வழங்குவது மற்றும் திரும்ப பெறுவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் சென்னையில் கடந்த 4ம் தேதி நடந்த கூட்டுறவு மாநாட்டில், மெதுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, மாநில விருது வழங்கப்பட்டு உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், கூட்டுறவுத்துறை செயலர் சத்யபிரதா சாஹூ ஆகியோர், விருதை வழங்கினர். செயலாட்சியர் விஜயராகவன், மெதுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் சசிகுமார் பெற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி