உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 வர்ணம் பூசாத வேகத்தடைகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருத்தணி: திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலையில், அகூர், கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், சமத்துவபுரம், கிருஷ்ணாகுப்பம் மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில், 25க்கும் மேற்பட்ட இடங்களில் விபத்துகல்ளை தவிர்ப்பதற்கு, நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்து பராமரித்து வருகின்றனர். இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் உள்ளதை அறியும் வகையில் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் தீட்ட வேண்டும். ஆனால் நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி பராமரிக்காததால் பெரும்பாலான வேகத்தடைகளில் வர்ணம் அழிந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வந்து, தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் வேகத்தடையில் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, வேகத்தடைகளுக்கு வர்ணம் தீட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை