உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழமையான மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

பழமையான மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

கடம்பத்துார்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது போளிவாக்கம், போளிவாக்கம் சத்திரம், காந்திப்பேட்டை, செங்காடு, தொடுகாடு உட்படஎட்டுக்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் வேம்பு, புளி, ஆலம், வேங்கை என, 100க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் வயதான நிலையில் உள்ளதால் பல மரங்களின் கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் சாலையோரம் உள்ள சேதமடைந்த மரத்தால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும்போது விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நெடுஞ்சாலையோரம் வயதான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை