உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊத்துக்கோட்டை - -ஜனப்பன்சத்திரம் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

ஊத்துக்கோட்டை - -ஜனப்பன்சத்திரம் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை -- ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும், 15,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. சில மாதங்களாக இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலை முழுதும் சீரமைக்காமல், 'பேட்ச் ஒர்க்' மட்டும் செய்யப்படுகிறது. சமீபத்தில், 'மிக்ஜாம்' புயலால் பெய்த பலத்த மழையில் இந்த மார்க்கத்தில் சாலை முழுதும் சேதம் அடைந்து காணப்படுகிறது.மீண்டும், 'பேட்ச் ஒர்க்' மட்டும் செய்யப்பட்டதால், குண்டும், குழியுமான சாலை, மேடு, பள்ளங்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த மேற்கண்ட சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், அதன் மேல் வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளனர். இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. விபத்தை கட்டுப்படுத்த போடப்பட்ட வேகத்தடைகளால் தற்போது விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் மார்க்கத்தில் உள்ள வேகத்தடைகளுக்கு, வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ