உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  துணை சுகாதார நிலையம் திறப்பு காவேரிராஜபுரம் மக்கள் மகிழ்ச்சி

 துணை சுகாதார நிலையம் திறப்பு காவேரிராஜபுரம் மக்கள் மகிழ்ச்சி

திருவாலங்காடு: புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப துணை சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதால், காவேரிராஜபுரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்டது, காவேரிராஜபுரம் கிராமம். இங்கு 7,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், 1980ம் ஆண்டு கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடம், 2020ம் ஆண்டு சேதமடைந்தது. இதன் காரணமாக, துணை சுகாதார நிலையம் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. தனியார் கட்டடம் குறுகியதாக இருந்ததால், கர்ப்பிணியர், முதியவர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.கடந்த 2023ம் ஆண்டு சேதமடைந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, கடந்தாண்டு 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது. கட்டுமான நிறைவடைந்த நிலையில், நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை