உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பராமரிப்பின்றி நிழற்குடை சேதம் ஊராட்சி நிர்வாகம் பாராமுகம்

 பராமரிப்பின்றி நிழற்குடை சேதம் ஊராட்சி நிர்வாகம் பாராமுகம்

திருத்தணி: ஊராட்சி நிர்வாகம் பயணியர் நிழற்குடையை முறையாக பராமரிக்காததால், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சியில் நத்தம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், திருத்தணி மற்றும் சோளிங்கர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து மூலம் சென்று வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில், பயணியர் வசதிக்காக திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், நத்தம் பேருந்து நிறுத்தத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், முறையாக பராமரிக்காததால், தற்போது பயணியர் நிழற்குடை சேதமடைந்துள்ளது. நிழற்குடையின் கூரையின் கான்கிரீட் பெயர்ந்து விழுகின்றன. இதனால், நிழற்குடைக்குள் செல்லாமல், பேருந்து வரும் வரை வெயில், மழையில் பயணியர் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், கிராம சபை கூட்டத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை