உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  இடிந்து விழும் அபாய நிலையில் ஊராட்சி கட்டடம்

 இடிந்து விழும் அபாய நிலையில் ஊராட்சி கட்டடம்

திருத்தணி: செருக்கனுார் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம், கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இக்கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தின் கூரை மற்றும் சுவர்கள் விரிசல் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழை பெய்யும் போது, மழைநீர் கசிந்து ஊராட்சியின் முக்கிய ஆவணங்கள், கணினி ஆகியவை சேதம் அடையும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றி, அங்கேயே புதிய கட்டடம் கட்டித் தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை