உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் 25,882 மாணவர்கள் பங்கேற்பு

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் 25,882 மாணவர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு, 105 மையங்களில் நடக்கிறது. இதில், 25,882 மாணவ - மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 2023 - -24ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இதற்காக, திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், 105 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த மையங்களில், 11,992 மாணவர்கள், 13,890 மாணவியர் என, மொத்தம் 25,882 பேர் தேர்வு எழுத உள்ளனர். வரும் 4ம் தேதி பிளஸ் 1 தேர்வு நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வில் 13,506 மாணவர்கள், 15,004 மாணவியர் என, 28,510 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள், ஐந்து மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு, 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தேர்வு அறையில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மாவட்டம் முழுதும் தேர்வு எழுதும் பள்ளிகளுக்கு நேரில் சென்று திடீர் சோதனை நடத்தி, பிட் எழுதும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பர் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்