உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ரயில்வே நிர்வாகம் ஒத்திவைப்பு

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ரயில்வே நிர்வாகம் ஒத்திவைப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில்வே துறைக்கு சொந்தமான, 2.26 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.அதில் உள்ள வீடு, கடை, தேவாலயம், கோவில் ஆகியவற்றை தாமாக அகற்றிக்கொள்ள ரயில்வே நிர்வாகம் போதிய கால அவகாசம் வழங்கியது. நேற்று, ஆக்கிரமிப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. மாற்று இடம் தராமல் வீடுகளை இடிக்கக் கூடாது என அங்கு வசிப்பவர்கள், நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், வீடுகளை காலி செய்து இடத்தை ஒப்படைக்க, இறுதியாக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று நடைபெற இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள், 10 நாட்கள் கழித்து மேற்கொள்ளப்படும் என, ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இடைப்பட்ட நாட்களில், பொன்னேரி சப்- - கலெக்டரிடம் முறையிட்டு மாற்று இடம் கேட்க இருப்பதாக, அப்பகுதி வாசிகள் தரப்பில் கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ