உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மணல் லாரிகள்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மணல் லாரிகள்

கடம்பத்துார்,:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் ஊராட்சியில் உள்ள ஏரியிலிருந்து அரசு உத்தரவுப்படி சவுடு மணல் அள்ளப்பட்டு லாரிகள் மூலம் சென்னை உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த லாரிகள் திருவள்ளூர், கடம்பத்துார், மப்பேடு வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இவ்வாறு சவுடு மணல் கொண்டு செல்லும் லாரிகள் தார்ப்பாய் போடாமல் செல்வதால், அவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.தார்ப்பாய் போடாமல் செல்லும் சவுடு மணல் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மணல் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்