உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தம்பதியை தாக்கியவர் கைது

தம்பதியை தாக்கியவர் கைது

திருத்தணி:திருத்தணி கணபதிநகர் பகுதியில் வசிப்பவர் சண்முகவேல் மனைவி லட்சுமி, 55. இவர் சமோசா வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன், 52, என்பவர் மது குடித்துவிட்டு, லட்சுமி வீட்டின் முன் நின்று தகாத வார்த்தைகளால் பேசினார். வீட்டிலிருந்து வெளியே வந்த லட்சுமியை உலகநாதன், கத்தியின் கைபிடியால் தாக்கினார். இதை தடுக்க சென்ற சண்முகவேலிடம், உலகநாதன் தகராறு செய்து கையால் தாக்கியுள்ளார். மேலும் லட்சுமியை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, உலகநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை