உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற கடைசி கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற கடைசி கூட்டம்

திருவள்ளூர்:மாவட்ட ஊராட்சி மன்றத்தின் கடைசி கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, வரும் அக்டோபரில், தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்டம் தோறும் உள்ள மாவட்ட ஊராட்சி மன்றங்களின் பதவிக் காலம் முடியும் தருவாயில் உள்ளது.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்றத்தின், கடைசிக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. தலைவர் விஜயகுமார் தலைமையில், நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, செயலர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், கடந்த ஐந்தாண்டு கால பதவிக் காலத்தின் போது, செய்யப்பட்ட பணிகளை குறிப்பிட்டு பேசிய தலைவர், உறுப்பினர்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றியும் தெரிவித்தார். கூட்டத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஊராட்சி அலுலக நிர்வாக செலவின தொகைக்கு, மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.இறுதிக் கூட்டம் என்பதால், ஊராட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி