உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வேன் - பேருந்து மோதல்; பயணியர் உயிர் தப்பினர்

 வேன் - பேருந்து மோதல்; பயணியர் உயிர் தப்பினர்

திருத்தணி: திருத்தணி நகராட்சி, சித்துார் சாலையில் உள்ள தனியார் பள்ளி எதிரே, 'டாடா ஏஸ்' வேன் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை, திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி தனியார் பேருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் நின்றிருந்த வேன் மீது மோதியது. இதில், வேன் மற்றும் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் பயணித்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை