மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே கார்கள் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி நான்குவழிச்சாலையில் உள்ள தடுப்பையும் தாண்டி ஓடையில் கவிழ்ந்தது.இதுகுறித்துபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கண்டெய்னர் லாரி ஒன்று மாருதிஆல்டோ கார்களை ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவில்பட்டியை கடந்து ஆலம்பட்டி கண்மாய் அருகே வந்தபோது டிரைவர் தூங்கியதால் கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறமிருந்து வலதுபக்கம் பாய்ந்து அருகில் உள்ள ஓடையில் கவிழ்ந்தது. லாரியில் வந்தவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காயமடைந்தவர்கள் விபரம் தெரியவில்லை. விபத்தினால் நான்குவழிச்சாலையில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டுசங்கரி, போலீசார் காளிஸ்வரி, சுப்பிரமணியன் ஆகியோர் உடனடியாக போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்துகுறித்து கோவில்பட்டி மேற்குபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025