உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வெறிநாய்கள் கடித்ததில் 22 ஆடுகள் பரிதாப பலி

வெறிநாய்கள் கடித்ததில் 22 ஆடுகள் பரிதாப பலி

துாத்துக்குடி, துாத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே உள்ள அரசன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரின் மகன்கள் முருகன், சுப்புராஜ் ஆகிய இருவரும் விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இருவருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இவர்களது ஆட்டு தொழுவில் புகுந்து 22 ஆடுகள் மற்றும் குட்டிகளை கடித்துள்ளது. இதில், 22 ஆடுகளும் உயிரிழந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:அரசன்குளம் கிராமத்தில் 60 சதவித மக்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறோம். 30,000த்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. வழக்கமாக வெறிநாய்கள் ஒரு சில ஆடுகளை கடித்துவிட்டு வெறிநாய்கள் ஓடிவிடும். ஆனால், தற்போது 22 ஆடுகளை வெறிநாய்கள் கடித்துள்ளன. வெறி நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை