மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி : துாத்துக்குடி, அண்ணா நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம், 32; வழக்கறிஞர். இவர், அண்ணா நகர் மெயின் ரோட்டில் ஏ.இ.எம்., என்ற பெயரில் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார்.வழக்கம் போல, மெடிக்கலை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு, செந்தில் ஆறுமுகம் தன் டூ - வீலரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கும்பல் திடீரென செந்தில் ஆறுமுகத்தை மறித்து அரிவாளால் வெட்டினர். அவர் தப்பியோட முயன்ற போதிலும், அந்த கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். தென்பாகம் போலீசார் விசாரிக்கின்றனர். செந்தில் ஆறுமுகம் கொலை தொடர்பாக, அவரது சகோதரியின் கணவரான கோவில்பட்டி நாலாட்டின்புதுாரைச் சேர்ந்த கோபிநாத், 37, உட்பட ஆறு பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:கொலை செய்யப்பட்ட செந்தில் ஆறுமுகத்தின் தாய், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரது பெயரில் இருந்த இடத்தில் செந்தில் ஆறுமுகம் தனியாக கட்டடம் கட்ட முயன்றார். அதில், அவரது அக்கா விக்னேஷ்வரிக்கும் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விக்னேஷ்வரியின் கணவர் கோபிநாத், கூலிப்படை கும்பலுடன் சேர்ந்து செந்தில் ஆறுமுகத்தை கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025