உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / புகையிலை பொருட்கள் பறிமுதல் ; பா.ஜ., நிர்வாகியுடன் மூவர் கைது

புகையிலை பொருட்கள் பறிமுதல் ; பா.ஜ., நிர்வாகியுடன் மூவர் கைது

விளாத்திக்குளம்: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள காடல்குடி பகுதியில், ஒரு தனியார் கிட்டங்கியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார், காடல்குடி அருகே கந்தசாமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கிட்டங்கியின் அருகே நின்ற வாகனத்தில் சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 800 கிலோ இருந்தது.இதையடுத்து, புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கிட்டங்கி உரிமையாளரான அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன், 45, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், 40, கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது சவில், 38, கெபிப், 34, ஆகியோரை கைது செய்து விளாத்திக்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்ட பழனிமுருகன், பா.ஜ., புதுார் ஒன்றிய செயலராக உள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை