உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கடலில் தவறி விழுந்த துாத்துக்குடி மீனவர் பலி

கடலில் தவறி விழுந்த துாத்துக்குடி மீனவர் பலி

துாத்துக்குடி:துாத்துக்குடி தாளமுத்துநகர் அருகே அலங்காரதட்டு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி, 47. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். திருமணமாகி மனைவி இரு மகன்கள், மகள் உள்ளனர். கடந்த 10ம் தேதி நாட்டுப்படகில் தாளமுத்துநகரை சேர்ந்த ஜெரால்டு, 38, ஜெய்சன், 31, லிங்ஸ்டன், 34, பிரின்சன், 24, அகமது கனி, 55, அந்தோணி மீன்பிடி தொழிலுக்கு சென்றார். நேற்று அதிகாலை கடற்கரையில் இருந்து 31 கடல்மைல் தொலைவில் வலையை விரித்து மீன்பிடித்தபோது, அந்தோணி தவறி கடலில் விழுந்தார். அப்பகுதியில் தொழிலில் இருந்த மீனவர்கள் அந்தோணியை மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்தோணி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தருவைகுளம் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை