உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பெண் துாய்மை பணியாளரை வெட்டிக்கொன்றவர் கைது

பெண் துாய்மை பணியாளரை வெட்டிக்கொன்றவர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், மஞ்சள்நீர்காயலைச் சேர்ந்தவர் கனகா, 45, கணவரை இழந்தவர். இவர், துாத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்; மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை பணிக்கு புறப்பட்ட இவர், சி.இ.ஜி., காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அப்போது, ஒருவர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். கனகா சம்பவ இடத்திலேயே இறந்தார்.தென்பாகம் போலீசார், பசுவந்தனையைச் சேர்ந்த முனியசாமி, 40, என்பவரை கைது செய்தனர். இவர், பழையகாயலில் மீன் கம்பெனி டிரைவர். இவருடன் பழக்கம் உள்ள கனகா, சமீப காலமாக பேசுவதை தவிர்த்ததால், கொலை செய்தது தெரியவந்தது.போலீசார் முனியசாமியை கைது செய்தனர்.மூன்றாவது பெண் கொலை: துாத்துக்குடி மாவட்டத் தில், பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடக்கிறது.எப்போதும்வென்றானில் ஒரு பெண், துாத்துக்குடியில் ஒரு பெண், நேற்று துாய்மைப் பணியாளர் கனகா என மூன்று பெண்கள், அண்மையில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை