திருப்பூர் : தமிழக அரசின், கனவு இல்லம் திட்டம், நடப்பு ஆண்டு அம-லுக்கு வந்துள்ளது; இந்தாண்டில், தலா, 3.50 லட்சம் ரூபாய் மானியத்துடன், ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்-ளது. இருப்பினும், தமிழக அரசின் நிபந்தனைகளால், 10 சதவீத வீடுகள் கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. தற்பாது சிறிய தளர்வு வழங்கப்பட்டுள்ளது. துவக்கத்தில், குடிசைுகளில் வசிப்-பவர் மட்டும் பயனாளிகள் என்றதால், 17 மாவட்டங்களில் பய-னாளிகள் தேர்வு மிக சொற்பமாக இருந்துள்ளது.மண் சுவர், தகர சீட் வேய்ந்த வீடுகள், பழைய வீடுகளில் வசிப்பவரும் புதிய வீடு கட்டலாம் என, அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, மீண்டும் பயனாளிகளை கண்டறியும் பணி வேகமெடுத்துள்ளது.மத்திய, மாநில அரசுகளின், வீடு கட்டும் திட்டங்களில் பயன்-பெற, மாநில அளவில் பராமரிக்கப்படும் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும். இல்லாதவர்கள், எந்த திட்டத்திலும் பயன்-பெற முடியாது. வீடு கட்டும் திட்டங்களுக்கான கணக்கெடுப்பு, 2017ல் தனி அலுவலர்கள் பொறுப்பில் இருந்த நேரத்தில் நடத்தப்பட்டது. வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தவில்லை; மனு கொடுத்தவர் பெயர் மட்டுமே சேர்க்கப்பட்டது. போதிய விழிப்புணர்வு இல்-லாததால், ஏழைகளின் பெயர், இடம்பெறாமல் விடுபட்டது.விண்ணப்பித்து காத்திருந்தவர் பெயர்களும், இடம்பெற-வில்லை. இத்திட்டத்தில் வீடு கட்டலாம் என்று காத்திருந்தோ-ருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.தனி அலுவலர்கள் பொறுப்பில் இருந்த போது, கணக்கெடுப்பு முறையாக நடக்கவில்லை. எனவே, புதிய கணக்கெடுப்பு நடத்-திய பிறகு, பயனாளிகளை இறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு, ஊரகப்பகுதிகளுக்கனா வீடு கட்டும் திட்டங்களுக்கான பய-னாளிகள் பட்டியல் தயாரிப்பை, மீண்டும் செம்மைப்படுத்தி துவக்க, ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.