உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத 1,365 பேர்

ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாத 1,365 பேர்

திருப்பூர் : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், சமூக அறிவியல் பாடத்தில் அதிக பேர் தேர்ச்சி பெறாத விபரம் வெளியாகியுள்ளது.மாவட்டத்தில், ஐந்து பாடங்களில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்கள், 1,365 பேர் உள்ளனர். இதில் அதிகபட்சமாக, சமூக அறிவியலில், 526 பேரும், குறைந்த பட்சமாக ஆங்கிலத்தில், 12 பேரும் தேர்ச்சி பெறவில்லை. தமிழில், 91 பேரும், கணிதத்தில், 304 பேரும், அறிவியலில், 432 பேரும், தேர்ச்சி பெறவில்லை. பாடவாரியாக, 3,767 பேர் தேர்ச்சி பெறாத நிலையில், ஒரு பாடத்தில் மட்டும், 1,365 பேர் தோல்வியடைந்துள்ளனர். மாவட்டத்தில், 1,227 மாணவியரும், 2,545 மாணவரும் தேர்ச்சி பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !