உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பேர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பேர் போக்சோவில் கைது

உடுமலை;உடுமலை அருகே, பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய, இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.உடுமலை அருகேயுள்ள அம்மாபட்டியை சேர்ந்த, ஹரிஹரன், 19. மற்றும் யுவராஜா,22, ஆகியோர், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.போலீசார் கூறுகையில், 'பள்ளிக்குச்செல்லும் சிறுமி, தனது பாட்டி வீட்டில் சைக்கிளை கொண்டு வந்து நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, அவருடன் பழகிய தாய்மாமன் முறையிலான ஹரிஹரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த, சில மாதங்களாக, யுவராஜாவும், அப்பெண்ணை, காதலிப்பதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், சிறுமி, 8 மாத கர்ப்பமான நிலையில், புகாரின் அடிப்படையில், இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி