உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயல்வீரர்கள் கூட்டம்

செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயல்வீரர் கூட்டம், கோம்பைத் தோட்டம், மாவட்ட மர்க்கஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. மாநில தலைமை அறிவித்துள்ள, 'அழகிய முன்மாதிரி இப்ராகிம்' என்ற 10 மாத கால செயல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டதில் குழப்பம் உள்ளது. எனவே எண்ணிக்கையின் போது, ஒப்புகைச் சீட்டு விவரங்களை சரி பார்த்து முடிவுகளை வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் நுார்தீன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சபீர் அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட நிர்வாகிகள் யாசர் அராபத், சிராஜூதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை