உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உபகரணம் இன்றி விபத்து; தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

உபகரணம் இன்றி விபத்து; தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

திருப்பூர்:பாதுகாப்பு உபகரணம் வழங்காமல், ஒப்பந்த தொழிலாளர்களை மின்சார பணிகளில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.சேலம் மேச்சேரியை சேர்ந்தவர் சரவணன்; திருப்பூரில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த, 3ம் தேதி முதலிபாளையம் துணை மின் நிலையம் சென்று, மின் கம்பத்தில் ஏறி பணியாற்றி கொண்ருந்த போது, மின்சாரம் தாக்கியது.திருமணமான சில மாதங்களில் இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது, ஊழியர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலுவலர்கள் கவனக்குறைவு காரணமாக, அப்பாவி ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த, நான்கு ஆண்டு களில், 40 ஒப்பந்த தொழிலாளர் மின்விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 10 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு உபகரணம் வழங்காமல், ஒப்பந்த தொழிலாளர்களை மின்சார பணிகளில் ஈடுபடுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி