உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்ணோடு சேர்ந்து மரங்களும் மாயம்

மண்ணோடு சேர்ந்து மரங்களும் மாயம்

பல்லடம்:திருப்பூர் மாவட்டத்தில், 260க்கும் மேற்பட்ட நீர் நிலைகளில் வண்டல் மண், களிமண் அள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை முறைகேடாக பயன்படுத்தி, கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. பல்லடம் வட்டாரத்தில் அனுப்பட்டியில் துவங்கி, கரடிவாவி, கிருஷ்ணாபுரம், கரைப்புதுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மண் கடத்தல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், புளியம்பட்டி கிராமத்தில், கிராவல் மண்ணுடன் சேர்த்து, கருவேல மரங்களும் மாயமாகி உள்ளன.இங்குள்ள குட்டையில், 50க்கும் மேற்பட்ட கருவேல மரங்கள் இருந்தன. இரண்டு ஆண்டுகள் முன், இதேபோல் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்ட போதும், குட்டையில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.தற்போதோ, குட்டையில் இருந்த மரங்கள் அனைத்தும் மாயமாகிவிட்டன. வண்டல் மண் என்ற பெயரில், நுாற்றுக்கணக்கான லோடு கிராவல் மண் அள்ளப்பட்டுள்ளது. மண்ணுடன் சேர்த்து மரங்களும் மாயமான இச்சம்பவம், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புளியம்பட்டி வி.ஏ.ஓ., குணசேகரனிடம் கேட்டதற்கு, ''குட்டையில் மரம் வெட்டியதாக, யாரும் புகார் அளிக்கவில்லை. மரம் கொஞ்சம் இருந்தது; எண்ணிக்கையெல்லாம் தெரியாது. அவை, முள் மரம் தான்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ