உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிலம்பத்தில் சாதனை : மாணவர்கள் முயற்சி

சிலம்பத்தில் சாதனை : மாணவர்கள் முயற்சி

திருப்பூர்:மே தினத்தை முன்னிட்டு, சாதனை புத்தகத்தில் இடம் பெற, சிலம்ப மாணவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.மே தினத்தை முன்னிட்டு, எம்.கே., சிலம்ப அகாடமி சார்பில், நோபல் சாதனை புத்தக நிறுவனத்தார் முன்னிலையில், சிலம்ப மாணவ, மாணவியரை வைத்து புதிய சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிலம்பம் பயிலும் மாணவர்கள், 200 பேர், உழைப்பாளர் சிலை வடிவில், 1.30 மணி நேரம் நின்று, சிலம்பம் சுற்றியும், நடனமாடியும் தங்களின் திறமையை வெளிக்காட்டினர்.திருப்பூர், முத்தமிழ் சிலம்ப பயிற்சி மையம் சார்பில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார், மாநகராட்சி, 33வது வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !