உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொலை முயற்சி; இருவர் கைது

கொலை முயற்சி; இருவர் கைது

பல்லடம் : பல்லடம் அருகே காரணம்பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ், 55. பந்தல் கான்ட்ராக்டர். இதே பகுதியை சேர்ந்த பாபு என்பவர் செல்வராஜிடம் பந்தல் பொருட்கள் எடுத்து ஆர்டர்கள் செய்து வருகிறார். இதில், இருவருக்கும் இடையில் வரவு செலவு பிரச்னை இருந்து வந்துள்ளது.நேற்று முன்தினம்இரவு, பாபு, உறவினர் மகன் சதீஷ் மற்றும் முனியன் ஆகிய மூவரும் சேர்ந்து, கத்தியால், செல்வராஜின் கழுத்தை அறுத்தனர். படுகாயம் அடைந்த செல்வராஜ் சூலுார் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில், பாபு, சதீஷ் என இருவரையும் போலீசார் கைது செய்து தலைமறைவாக உள்ள முனியனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !