உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி., வாய்க்காலுக்கு கம்பிவேலி குப்பைக் கூடாரமாவதை தடுக்க வழி

பி.ஏ.பி., வாய்க்காலுக்கு கம்பிவேலி குப்பைக் கூடாரமாவதை தடுக்க வழி

பொங்கலுார் : பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட(பி.ஏ.பி.,) வாய்க்கால்களில் குப்பை கொட்டு வதைத் தடுக்க கம்பிவேலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் இப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட(பி.ஏ.பி.,) பிரதான வாய்க்கால்களைக் கூட விட்டுவைக்காமல் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.இறந்த கோழிக்கழிவுகள் கூட கொட்டப்படுகின்றன. பொங்கலுார் ஊராட்சி, காங்கயம் நகராட்சி பகுதிகளில், வாய்க்காலில் குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது.இதனால், தண்ணீர் அசுத்தம் அடைந்து கழிவுநீராக விளைநிலங்களுக்கு பாய்கிறது. இதை குடிக்கும் பறவைகள், கால்நடைகள் நோய்த் தாக்கு தலுக்கு ஆளாகின்றன.

'நமக்கு நாமே' திட்டம்

திருப்பூர் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்து, குப்பை அதிகம் கொட்டும் இடங்களில் கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று கலெக்டருக்கு ஏற்கனவே பரிந்துரைத்துள்ளனர். பொங்கலுார், காங்கயம் பகுதிகளில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கம்பி வேலி அமைக்க விவசாயிகள் முன்வந்துள்ளனர். விரைவில் பொங்கலுாரில் கம்பி வேலி அமைப்பதற்கான ஆயத்தப் பணி துவங்க உள்ளது.பொங்கலுார் பி.டி.ஓ., விஜயகுமார் கூறுகையில், ''வெள்ளகோவில் - காங்கயம் நீர் பாதுகாப்புக்குழு தலைவர் வேலுச்சாமி என்னை தொடர்பு கொண்டார். ஒன்றிய பொறியாளரிடம் இதுகுறித்து ஆய்வு செய்ய கடிதம் கொடுத்துள்ளேன்.விவசாயிகள், பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் ஆய்வு பணி துவங்கும். பொதுப்பணி துறை ஒப்புதல் கடிதம் வழங்கிய பின் விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்தினால் கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.பொங்கலுார், காங்கயம் பகுதிகளில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கம்பிவேலி அமைக்க விவசாயிகள் முன்வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ