| ADDED : ஜூன் 10, 2024 02:04 AM
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, கடந்த மூன்று மாத காலம், மக்கள் பிரதிநிதிகள் பொது சேவை பணியாற்று வதில் சுணக்கம் காணப்பட்டது. இந்நிலை இன்று முடிவுக்கு வருகிறது.ஊராட்சி அளவில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நகர்ப்புற உள்ளாட்சிகளில் கவுன்சிலர்கள்; சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிக்கு எம்.எல்.ஏ., மற்றும்எம்.பி., என மக் களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியாற்று கின்றனர்.லோக்சபா தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் அதிகாரம் முடக்கப்பட்டது. இதனால், அரசு வாகனங்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் உரிய துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அமைச்சரவை கூட்டம், சட்டசபை கூட்டம் மட்டுமின்றி, மாநகராட்சி மன்ற கூட்டங்கள்; குறை கேட்பு கூட்டங்கள்; புதிய திட்டங்கள் துவக்கம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் மக்கள் பிரதிநிதிகள் பணி மீண்டும் துவங்கும் நிலை காணப்படுகிறது. இன்று முதல் இவர்களது வேகம் பாய்ச்சல் எடுக்கும்.சிக்கல் இல்லைஉள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை அடிப்படை மற்றும் அத்தியாவசியப் பணிகள் என்ற நிலை உள்ளது. இவற்றில் உரிய மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் பணிகளில் கண்காணிப்பு, வேகம், தேவைகள் பூர்த்தியாகாத நிலை ஆகியன நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தின. தேர்தல் விதிமுறை முடிவுக்கு வந்ததால் இனி சிக்கல்கள் இல்லை.