உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேவா பாரதி நடத்திய பண்பு பயிற்சி முகாம்

சேவா பாரதி நடத்திய பண்பு பயிற்சி முகாம்

அனுப்பர்பாளையம்;சேவா பாரதி சார்பில் திருமுருகன்பூண்டியில் மாணவர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் நடந்தது.திருப்பூர் மாவட்ட சேவா பாரதி அமைப்பு சார்பில், மாணவர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் திருமுருகன்பூண்டி சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் ஸ்டாலின் கிருஷ்ணா, தலைமை வகித்தார்.கேரளா, தமிழக இணை பொது செயலாளர் ரஞ்சனா, மாணவர்களுக்கு இசையுடன் கூடிய பாடல், பயிற்சி, ஸ்லோகம், நடனம் ஆகியவற்றை கற்று கொடுத்தார். யோகா, அறிவு சார்ந்த விளையாட்டுகள், நற்சிந்தனைகள் போன்றவை கற்று கொடுக்கப்பட்டது.மாவட்ட அமைப்பு செயலாளர் கன்னியப்பன், பண்பாட்டு வகுப்பு கல்வியின் முக்கியத்துவம்; அதன் மூலம் ஏற்படும் சமுதாய மாற்றங்கள் குறித்து பேசினார். முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.......சேவா பாரதி சார்பில் நடந்த மாணவர்களுக்கான பண்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற சேவா பாரதி நிர்வாகிகள்; பங்கேற்ற மாணவ, மாணவியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை