மேலும் செய்திகள்
மலம்புழா அணைக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா
2 hour(s) ago
ஒழுக்கம் விழுப்பம் தரும்; மாணவர்களுக்கு அறிவுரை
3 hour(s) ago
திருப்பூர்:திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஐயப்பன் கோவில் வளாகத்தில், ஸ்ரீகிருஷ்ணர் சன்னதியும் அமைக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா, 10ம் தேதி நடைபெற உள்ளது.அன்று காலை, 8:15 மணிக்கு மேல், 9:15 மணிக்குள், சபரிமலை, பிரதம தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மோகனரு தலைமையில், கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.வரும், 8ம் தேதி காலை, 5:30 மணிக்கு மகா கணபதி ேஹாமம், 9ம் தேதி காலை, 10:30 மணிக்கு, விக்ரக கலச பூஜையும், இரவு, 8:00 மணிக்கு, ஸ்ரீகிருஷ்ணர் பிரதிஷ்டையும் நடைபெறுகிறது. மறுநாள் காலை லகு கும்பாபிேஷகமும், 10:00 மணி முதல் அன்னதானமும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், ஸ்ரீஐயப்பன் பக்த ஜன சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கும்பாபி ேஷகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தை துாய் மைப்படுத்தும், உழவாரப்பணி நேற்று நடந்தது.திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் மற்றும் சபரிமலை புண்ணியம் பூங்காவனம் அறக்கட்டளை சார்பில், 125 பேர் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.
2 hour(s) ago
3 hour(s) ago