உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹாக்கி அணியினருக்கு சீருடை அரசுப்பள்ளியில் வழங்கல்

ஹாக்கி அணியினருக்கு சீருடை அரசுப்பள்ளியில் வழங்கல்

உடுமலை: பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஹாக்கி அணி மாணவர்களுக்கு, சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை அருகேயுள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், ஹாக்கி விளையாட்டில் தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.அவர்களை ஊக்குவிக்கும் வகையில், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் மற்றும் ஹாக்கி விளையாட்டு ஆர்வலர்கள் சார்பில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீருடைகள் வழங்கப்பட்டது.இந்த சீருடைகளை மாணவர்களுக்கு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் பாபு வழங்கினார். உடன் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஏற்பாடுகளை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை