உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவு எரிப்பால் ஓட்டுநர்கள் பாதிப்பு

கழிவு எரிப்பால் ஓட்டுநர்கள் பாதிப்பு

உடுமலை : உடுமலை மலையாண்டிகவுண்டனுார் ரோட்டோரத்தில், ஆபத்தான முறையில் கழிவுகளை எரிக்கின்றனர்.உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட மலையாண்டிகவுண்டனுார் பகுதி, கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சிக்குட்பட்டது. மலையாண்டிகவுண்டனுார் வழியாக கொழுமம் செல்லும் ரோட்டில், தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் கடந்து செல்கின்றன.இப்பகுதியில், ரோட்டோரத்தில் ஆபத்தான முறையில் கழிவுகளை தீயிட்டு எரிப்பது, வாகன ஓட்டுநர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு எரியும் தீயில் இருக்கும் கழிவுகள், ரோடு வரை பரவுகின்றன.இதனால் வாகன ஓட்டுநர்கள், கனரக வாகனங்கள் செல்லும் போது ஒதுங்கிச்செல்ல முடியாமல், பயத்தில் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். பாதுகாப்பில்லாமல் இவ்வாறு எரிக்கப்படுவதை உள்ளாட்சி நிர்வாகம் தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை