உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளிகள் திறப்பு ஏற்பாடு;கல்வித்துறை ஆலோசனை 

பள்ளிகள் திறப்பு ஏற்பாடு;கல்வித்துறை ஆலோசனை 

திருப்பூர்:பள்ளிகள் திறப்பு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து நடப்பு வார இறுதிக்குள் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதில், தலைமை ஆசிரியர் களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.ஒன்று முதல் பிளஸ், 2 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, ஜூன், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தலைமை ஆசிரியருக்கான பொறுப்புகள் குறித்து ஆலோசனை கூட்டம், விரைவில்நடக்கவுள்ளது.முதன்மை கல்வி அலுவலராக இருந்த கீதா, மே, 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், புதிய சி.இ.ஓ., நியமிப்பது தாமதமாகும் வாய்ப்புள்ளது. எனவே, பக்தவச்சலம் தலைமையில் ஜூன், 5 முதல், 7ம் தேதிக்குள் ஒரு நாள் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளைமாவட்ட கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை