உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் கட்டண கணக்கீடு வசந்தம் நகரில் மாற்றம்

மின் கட்டண கணக்கீடு வசந்தம் நகரில் மாற்றம்

திருப்பூர்;செட்டிபாளையம் மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் கட்டணம் கணக்கீட்டு மாதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராமசந்திரன் அறிக்கை: செட்டிபாளையம் பிரிவு அலுவலகம், செட்டிபாளையம் பகிர்மானத்துக்கு உட்பட்ட வசந்தம் நகர், அருண் கார்டன், மணிகண்டன் நகர், அழகாபுரி நகர், சதாசிவம் நகர், மகாசக்தி நகர் பகுதிகளில் நிர்வாக காரணங்களுக்காக வசந்தம் நகர் (010) புதிய பகிர்மானம் உருவாக்கப்பட்டு, புதிய மின் இணைப்பு எண் வழங்கி, மின் கட்டண கணக்கீட்டு மாதம் இரட்டைப்படை மாதத்திலிருந்து, ஒற்றைப்படை மாதத்துக்கு நிர்வாகம் காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இனி வரும் காலங்களில் மே, ஜூலை, செப்., நவ., ஜன., மற்றும் மார்ச் மாதங்களில் புதிய மின் இணைப்பு மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, அன்றிலிருந்து, 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !