உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏற்றுமதி இரட்டிப்பாகும்

ஏற்றுமதி இரட்டிப்பாகும்

திருப்பூர்;''சவால்களைக் கடந்து திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் இரட்டிப்பாக உயர வாய்ப்புள்ளது'' என்று சுதந்திர தின விழாவின்போது, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் கூறினார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், மூத்த உறுப்பினர் சம்பத்குமார், தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கும், திருப்பூர் வளர்ச்சிக்கும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் எப்போதும் துணை நிற்கும். நிறுவன தலைவர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் பல்வேறு பணிகளை செய்துள்ளனர். சவால்களை கடந்து, சரித்திரம் படைக்கும் நிலையை, திருப்பூர் பின்னலாடை தொழில் எட்டும்; விரைவில், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் இரட்டிப்பாக உயர வாய்ப்புள்ளது,'' என்றார். துணை தலைவர் இளங்கோவன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணைச் செயலாளர்கள் சின்னசாமி, குமார் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அறக்கட்டளை சார்பில், நொய்யல் அணைக்காடு தடுப்பணையில் இருந்து, மூளிக்குளம் செல்லும் ராஜவாய்க்கால் துார்வாரி சுத்தம் செய்த பணிக்கான நன்கொடை வழங்கப்பட்டது. பணிகளை மேற்கொண்ட வேர்கள் அமைப்பு நிர்வாகிகள் பாராட்டப்பட்டனர். துார்வாரும் பணிகளுக்கான, த அறக்கட்டளையின் உதவித்தொகை, ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. நீர்நிலை பராமரிப்பு பணிகளுக்கு உதவிய, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள், சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து, கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை