| ADDED : ஆக 19, 2024 11:58 PM
திருப்பூர்:பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மாராத்தாள், 95; கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு, மகள்களுடன் வந்த மூதாட்டி மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், ''எனக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மகன் இறந்துவிட்டார். பல்லடம் கரடிவாவியில், எனது கணவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் இருந்தது.நான் உயிருடன் உள்ள நிலையில், இறந்துவிட்டதாக போலி சான்று பெற்று, உறவினர்கள் அந்த நிலத்தை முறைகேடாக தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர். போலி இறப்புச்சான்று வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பூர்வீக சொத்தில், எனது குழந்தைகளுக்குச் சேரவேண்டிய பங்கை மீட்டுத்தரவேண்டும்'' என்று கூறியுள்ளார்.