உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்றும் நாளையும் கூடுதல் சிறப்பு பஸ்

இன்றும் நாளையும் கூடுதல் சிறப்பு பஸ்

திருப்பூர்:கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், இன்றும், நாளையும், அதிக பயணிகள் சொந்த மாவட்டங்களுக்கு பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், கடந்த வாரத்தை விட (50 பஸ்கள்) நடப்பு வாரம் கூடுதல் பஸ்களை (105 பஸ்கள்) மூன்று பஸ் ஸ்டாண்டுகளில் இருந்தும் இயக்க உள்ளனர். திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 50, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 35 என, 105 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.'நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வரும், 6ம் தேதி முகூர்த்தம், 7ம் தேதி அமாவாசை என்பதால் கூட்டம் ஓரளவு அதிகரிக்கும். எனவே, கூடுதல் பஸ் இயக்கப்படுகிறது. இன்று இரவு முதல் திங்கள் காலை வரை பஸ்கள் இயங்கும்,' என, போக்குவரத்து மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை