உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

திருமுருகன்பூண்டி அடுக்கு மாடிக்குடியிருப்பு பகுதியில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.விழுதுகள் தன்னார்வ அமைப்பு, லோட்டஸ் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்தின. திட்ட மேலாளர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். சந்திரா தலைமை வகித்தார். லோட்டஸ் கண் மருத்துவமனை மருத்துவர் குழு முகாமை நடத்தியது.ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை ஆகியன நடத்தப்பட்டது. துாய்மைப்பணியாளர்கள் 107 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்