உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு

தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு

பல்லடம் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.தரமான ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற அடுப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அடுப்பறையில் செல்லாமல் இருப்பதை பெரியோர்கள் கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லாமல் நெருப்பை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடாது. குறுகலான பகுதிகளில் தீயணைப்பு வாகனம் எளிதில் செல்ல வழி ஏற்படுத்தித் தர வேண்டும்.விழா காலங்களில் பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடி பொருட்களை சேமித்தல் அல்லது வெடித்தல் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டன.கவனக்குறைவே தீ விபத்துக்கு காரணம்; தீயினால் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அழிவு ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி